ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமலையில் தீ

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமலையில் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2023-08-06 19:43 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் சிறுமலை என அழைக்கப்படும் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காய்ந்த பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் கிருஷ்ணன் கோவில் குன்னூர் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விைரந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவில் தீ கட்டுக்குள் வந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்