நாகர்கோவிலில்லாரி ஒர்க் ஷாப்பில் தீ விபத்து2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

நாகர்கோவிலில், லாரி ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.

Update: 2023-02-08 17:16 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில், லாரி ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.

ஒர்க் ஷாப்பில் தீ

நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஆயுதப்படை மைதானத்துக்கு செல்லும் சாலையில் லாரி ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு மாரியப்பன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

அதன்பிறகு இரவு 9.30 மணியளவில் பூட்டியிருந்த ஒர்க் ஷாப்பில் இருந்து புகையாக வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாரியப்பன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒர்க் ஷாப்பை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.

மின் கசிவு

உடனே இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

அதற்குள் ஒர்க் ஷாப்பில் நிறுத்தியிருந்த 2 பழைய மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் அங்குள்ள நாற்காலி, மேஜை உள்ளிட்ட சில பொருட்களும் தீயினால் சேதமடைந்தன. இதற்கிடையே சம்பவ இடத்தக்கு வந்த நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்