ஏலகிரி மலையில் தீ விபத்து

ஏலகிரி மலையில் மர்ம ஆசாமிகள் தீ வைத்ததில் அரியவகை மரங்கள், மூலிகை செடி கொடிகள் எரிந்து நாசமானது.

Update: 2023-02-05 18:16 GMT

தீ விபத்து

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்த மலையில் அரியவகை மரங்கள், மூலிகை செடி கொடிகள், மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன. மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு, புகை பிடித்து தீயை அணைக்காமல் போட்டு விடுவதால் சருகுகள் மூலம் பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை ஜோலார்பேட்டை அருகே மலையடிவாரத்தில் ஊசி நாட்டான் வட்டம், ஏலகிரி கிராமம் தாமரை குளம் அருகே மலையடிவாரத்தில் உள்ளிட்ட 2 இடங்களில் மர்ம நபர்கள் காட்டுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். இதனால் 2 பகுதிகளில் காட்டுத் தீ மளமளவென பரவி மலையின் உச்சி பகுதிக்கு சென்றது.

மரங்கள் எரிந்து நாசம்

இதில் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. எனவே இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்மநபர்களை வனத்துறையினர் கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்