திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அச்சுக்கட்டு தெருவில் சேதுவள்ளி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தென்னங்கீற்றிலான கொட்டகையில் மூங்கில் மரங்கள் மற்றும் கீற்றுகள் அடுக்கு வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலையில் திடீரென்று கொட்டகையில் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஆனந்த் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர்.