உணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

உணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-04 12:03 GMT

சென்னை,

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் அதன் முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் அளவிலான குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15,236 உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1,572 உணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்