நிதியுதவி
தச்சநல்லூர் அருகே கொலை செய்யப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவியை தட்சணமாற நாடார் சங்கம் வழங்கியது
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி நாடார் (வயது 58). கூலி தொழிலாளி. இவர் கடந்த 26-6-2022 அன்று கரையிருப்பு காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவி புஷ்பம் தனது கணவர் இறந்து விட்டதால் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், வறுமையில் வாடுவதாகவும் கூறி நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்திடம் உதவி கேட்டு மனு கொடுத்திருந்தார். அந்த மனுவை சங்க நிர்வாக சபை கூட்டத்தில் வைத்து பரிசீலனை செய்து உதவித்தொகை வழங்க முடிவு செய்து, புஷ்பத்திடம் சங்கத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் ராஜகுமார் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார் மற்றும் சங்க காரிய கமிட்டி, நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.