மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி

மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2022-07-16 18:05 GMT

பனைக்குளம், 

மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடல் அட்டை தடையை நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பின் சொந்த ஊருக்கு திரும்பி வந்தபோது வேன் ஒன்று மீனவர்கள் வந்த வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்தில் 4 பேர் பலியானார்கள். விபத்தில் இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் நேற்று மண்டபம் வந்தார். அவரை மண்டபம் பேரூராட்சி தலைவரும், நகர் தி.மு.க. செயலாளருமான டி.ராஜா மற்றும் கட்சியினர் வரவேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீடுகளுக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் ஆறுதல் தெரிவித்து நிதி உதவிகள் செய்தார். தொடர்ந்து காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கூறும் பொழுது, மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்கள் விபத்தில் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு நேரடியாக ஆறுதல் கூறி நிதி உதவியும் செய்யப்பட்டுள்ளன. பலியான மீனவர்கள் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீன்வளத்துறை மற்றும் மீனவர் நல வாரியத்தின் சார்பிலும் கிடைக்க வேண்டிய உதவிகள் உடனே கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார். அப்போது ராமநாதபுரம் நகர் தலைவர் கார்மேகம், மண்டபம் ஒன்றிய தி.மு.க. பிரமுகர் பிரவீன், மண்டபம் யூனியன் துணைத் தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, ராமநாதபுரம் ஒன்றிய தி.மு.க. பிரமுகரும், அண்ணாமலை கார்ப்பரேஷன் நிறுவனருமான டி.கே.குமார், கவுன்சிலர் பூவேந்திரன், தி.மு.க. அப்துல் ரகுமான் மறைக்காயர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்