கபடி வீரரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிதிஉதவி
விளையாடியபோது உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிதிஉதவி வழங்கினார்
காரைக்குடி
காரைக்குடி செஞ்சை பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 16) என்பவர் விளையாடி கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், உயிரிழந்த கபடி வீரர் பிரதாப் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சம் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் ரூ.25 ஆயிரம் என ரூ.1¼ லட்சத்தை பிரதாப்பின் பெற்றோரிடம் வழங்கினார். அப்போது முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத்துரை, துணை தலைவர் குணசேகரன், நகர் மன்ற உறுப்பினர் ஹரிதாஸ்துரைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.