ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதிஉதவி

ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் நிதி உதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-09 18:45 GMT

ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் நிதி உதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நிதி உதவி

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா திட்டத்திஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் நிதி உதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.ன் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் ஆதரவற்ற மற்றும் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. அதன்படி பெற்றோரை இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், நோயினால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், குழந்தைகள் இல்லங்கள், சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை செய்யப்படும் குழந்தைகள், கணவரை இழந்த, விவாகரத்தான, பெற்றோரால் கைவிடப்பட்டு பாதுகாவலர் பராமரிப்பிலுள்ள குழந்தைகள், விபத்தினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பொருளாதார வசதியின்றி குழந்தைகளை பராமரிக்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகள், குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, இதர பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ளிட்ட 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயில்வதற்கு ஏதுவாக நிதி ஆதரவு மற்றும் வளா்ப்பு பராமரிப்பு ஒப்பளிப்பு குழுவினரால் பரிந்துரை செய்யப்படும் தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கு திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 1.4.2022 முதல் மாதம் ரூ.4,000 வீதம் வழங்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பெறலாம்

மேலும், இத்தொகையினை பெறுவதற்கு ஆண்டு வருமானம் கிராமப்புற பகுதிகளில் ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரத்துக்குள்ளும், நகர்புறப்பகுதிகளில், ரூ.36 ஆயிரத்திலிருந்து ரூ.96 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, இவ்வருமான வரம்பிற்குட்பட்ட மற்றும் தகுதிவாய்ந்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்கள் நிதி ஆதரவுத்தொகை பெறுவதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.131, முதல் தளம், மாவட்ட கலெக்டர் வளாகம், சிவகங்கை என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்