47 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று 47 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-21 19:00 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழைக்காலமாக இருப்பதால் அந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதையொட்டி அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் மாநிலம் முழுவதும் நேற்று 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி நேற்று முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் பரிசோதனை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 47 இடங்களில் நேற்று காய்ச்சல் தடுப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாம்கள் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கு பரிசோதனை

இதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவக்குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்தனர்.

அப்போது காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி காணப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் காய்ச்சல், சளி, இருமல் வராமல் தடுக்க அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்