உடலில் கத்தி போட்டு, ஊர்வலமாக வந்து பக்தர்கள் வழிபாடு

உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி உடலில் கத்தி போட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட ஊர்வலமாக வந்து பக்தர்கள் நூதன முறையில் வழிபாடு நடத்தினர்.;

Update:2023-04-13 00:08 IST

உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி உடலில் கத்தி போட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட ஊர்வலமாக வந்து பக்தர்கள் நூதன முறையில் வழிபாடு நடத்தினர்.

கத்தி போட்டு....

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் போது தினசரி ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். அதன்படி நேற்று தேவாங்கர் சமூகம் சார்பில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலத்தில் ஒரு வாழைப் பழத்தில் பெரிய கத்தி ஒன்று செருகப்பட்டு அந்த கத்தியைச் சுற்றி நூல்களால் தீர்த்தக் குடத்தை தொங்க விட்டு தூக்கி வந்தனர். மேலும் ஊர்வலத்தின் முன் ஏராளமானவர்கள் பக்தி கோஷத்துடன் உடலில் கத்தி போட்டு ரத்தம் சொட்டச் சொட்ட ஆடியபடி ஊர்வலமாக வந்தனர்.

சிறப்பு பூஜை

அம்மனை வருந்தி அழைக்கும் இந்த நூதன வழிபாட்டு முறையை ஏராளமானவர்கள் வியப்புடன் பார்த்தனர். உடுமலை பூமாலை சந்திலுள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து புறப்பட்ட தீர்த்தக் குட ஊர்வலம் தளி சாலை, சீனிவாசா வீதி, வ.உ.சி.வீதி, பசுபதி வீதி, வடக்கு குட்டைவீதி, பெரியகடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து மாரியம்மன் கோவிலை அடைந்தது.

அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர், தீர்த்தங்களை கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்