வேம்பு மாரியம்மன் கோவிலில் பொங்கல்-பூச்சாட்டு விழா
தண்டுக்காரன்பாளையம் வேம்பு மாரியம்மன் கோவிலில் பொங்கல்-பூச்சாட்டு விழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம், மாவிளக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.;
தண்டுக்காரன்பாளையம் வேம்பு மாரியம்மன் கோவிலில் பொங்கல்-பூச்சாட்டு விழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம், மாவிளக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் விழா
அவினாசியை அடுத்த சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம், வேம்பு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு மற்றும் பொங்கல் விழா, கடந்த 4-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி காலை, இரவு நேரங்களில், சாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், அதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு, தண்டுக்காரன்பாளையம் விநாயகர் கோவிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். இரவு 10 மணிக்கு அம்மனுக்கு நகை எடுத்தல். அதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மை அழைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொங்கல், மாவிளக்கு
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்தல், 10 மணிக்கு, விநாயகர் கோவிலிருந்து, பெண்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு விநாயகர் கோவிலிருந்து பக்தர்கள் அக்னி கும்பம் எடுத்து வந்தனர். இரவு 7 மணிக்கு கம்பம் களைதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் நேற்று பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகெர்ணடு சாமி தரிசனம் செய்தனர். விழா நிகழ்ச்சிகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடுதல், பகல் 1 மணிக்கு மறுபூஜை நடைபெற உள்ளது.