மகா மாரியம்மன் கோவில் திருவிழா

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-09-05 16:36 GMT

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மகா மாரியம்மன் கோவில் திருவிழா

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெருவில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து புற்று மண் எடுத்தல், கங்கை பூஜை மற்றும் சக்தி கரகம் அழைத்தல் நடைபெற்றது.

தொடர்ந்து தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி முதலில் கோவில் பூசாரிகள் சக்தி கரகத்துடன் தீ மிதித்தனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மாவிளக்கு ஊர்வலம்

இன்று (செவ்வாய்க்கிழமை) மகா மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் விருந்தாடி அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழாவும், நாளை (புதன்கிழமை (காலை அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தலும், மாலை காற்றாயப்ப சாமி மற்றும் கோலாட்டம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) விருந்தாடி அம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலமும், மாலை செல்லியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது.

வருகிற 9-ந் தேதி மகா மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் அம்மன் திருவீதி உலாவும், 10-ந் தேதி சக்தி முனியப்பன் கோவிலில் இருந்து பந்தகாசி ஊர்வலமும், தொடர்ந்து கோவில் வளாகத்தில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. வருகிற 11-ந் தேதி கொடி இறக்கம், கும்ப பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்