நல்லம்பள்ளி அருகேஓம்சக்தி- மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

Update: 2023-07-21 19:30 GMT

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை கோட்டைக்கரை கிராமத்தில் ஓம்சக்தி, மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் சாமி கோவில் திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கங்கணம் கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று அலகு குத்துதல்,, அம்மன் ஊர்வலம் மற்றும் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்