தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்
காரைக்குடி
சாக்கோட்டை போலீஸ் சரகம் விளரிக்காடு வடக்கு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 52).இவரது மனைவி காந்தி (45). ஆண்டியப்பன் பல்லடத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காந்தி சமீப காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று காந்தி நெஞ்சு வலிக்கிறது என்று மகளிடம் கூறியுள்ளார்.
இது குறித்து அவரது மகள் தனது தந்தை ஆண்டியப்பனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் காந்தி நெஞ்சு வலி தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்..இது குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.