தபால் அலுவலக பெண் ஊழியர் தற்கொலை

திண்டுக்கல் அருகே தபால் அலுவலக பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-02 19:45 GMT

திண்டுக்கல் அருகே மாலப்பட்டி ரோட்டில் தென்போஸ்கோ முதல் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகள் சுருதி (வயது 25). இவர், கோபால்பட்டி அருகே உள்ள ஜோத்தாம்பட்டி தபால் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது வீடு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் சுருதி தற்போது சுப்புராம் பட்டறை அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பழுதடைந்த வீட்டை பார்க்க சென்றார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்