விமானத்தில் நடுவானில் பெண் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி - சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் சென்ற பெண் பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

Update: 2022-12-18 17:03 GMT

கோப்புப்படம்

சென்னை,

விமானத்தில் சென்ற பெண் பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

சவுதி அரேபியாவில் இருந்து 378 பயணிகளுடன் மலேசியாவுக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில், ஜமீலா பிந்தி என்ற 58 வயது பெண் பயணிக்கு நடுவானில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சென்னை அருகே விமானம் பறந்து சென்றதால், சென்னை விமான நிலையத்திலேயே விமானி அவசர அவசரமாக தரையிறக்கினார்.

சென்னையில் ஜமீலா பிந்தி மற்றும் அவருடன் வந்த 2 பேருக்கு அவசரகால மருத்துவ விசா வழங்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.Full View

Tags:    

மேலும் செய்திகள்