பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

பெண் டி.எஸ்.பி. காயத்ரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-03 09:50 GMT

சென்னை,

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி. காயத்ரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் டி.எஸ்.பி. காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.விடியா தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா தி.மு.க. அரசுக்கும், பொம்மை முதல்-அமைச்சருக்கும் கடும் கண்டனம்.

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி. காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா தி.மு.க. முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்