மேல்மலையனூரில் பெண் பக்தர் திடீர் சாவு
மேல்மலையனூரில் பெண் பக்தர் திடீரென உயிரிழந்தார்.
மேல்மலையனூர்,
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பாரத் மனைவி ரீட்டா மேரி (வயது 22). இவர் தனது மாமியார் மதனா (55), உறவினர் யுவராணி ஆகியோருடன் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் வந்திருந்தார். பின்னர் ஊஞ்சல் உற்சவம் முடிந்தவுடன் வீட்டுக்கு புறப்பட தயாராகினர். அப்போது மதனா திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மதனாவை பரிசோதித்த டாக்டா்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.