பட்டாசு சத்தத்திற்கு பயந்து 15 மணி நேரமாக வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை.!

மூன்று சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒரு தானியங்கி கேமராவை பயன்படுத்தி வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.

Update: 2023-11-12 23:02 GMT

கோப்புப்படம் 

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளியையொட்டி, அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசுகள் வெடித்த நிலையில், நாயை பிடிப்பதற்காக வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று காலை வீட்டிற்குள் புகுந்த அந்த சிறுத்தை, 15 மணி நேரமாகியும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், மூன்று சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒரு தானியங்கி கேமராவை பயன்படுத்தி சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர். அத்துடன், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கூறுகையில், "இன்று இரவுக்குள் சிறுத்தை வெளியேறும் என நம்புகிறோம். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்