மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2022-10-23 18:45 GMT

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

சக்கர நாற்காலி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைசார்பில் ரூ.19 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தேசிய அடையாள அட்டைகள், உதவித்தொகை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வதற்கு வங்கி மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

தையல் எந்திரங்கள்

18 வயதிற்குமேற்பட்ட பார்வைதிறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, திருவாரூர் நகரசபை உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின் நல அலுவலர் பாலசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்