நெல்மணிகளை குவியலாக கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்
வேப்பங்குளம் நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளை குவியலாக கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். எனவே உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுக்கூர்:
வேப்பங்குளம் நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளை குவியலாக கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். எனவே உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பங்குளம் நெல்கொள்முதல் நிலையம்
மதுக்கூர் அருகே வேப்பங்குளம் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் மதுக்கூர், விக்ரமம், காடந்தகுடி, வாட்டாகுடி, அத்திவெட்டி, காசாங்காடு, இளங்காடு, மூத்தாக்குறிச்சி, கண்டியக்காடு, வேப்பங்குளம், ஆலத்தூர், ஆலம்பள்ளம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனைக்காக கொண்டு வந்து நெல்கொள்முதல் நிலையத்திற்கு முன்பு குவியல் குவியலாக கொட்டி வைத்து கடந்த 5 நாட்களாக காத்திருக்கின்றனர்.
உடனடியாக கொள்முதல்
நெல்மணிகளை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.