விவசாயிகள் கீரை கடைந்து நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் விவசாயிகள் கீரை கடைந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் புருசோத்தமன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் விவசாயிகள் மீது விரோத போக்கினை கடைபிடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக அவர்கள் இணை இயக்குனர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மண் சட்டியில் கீரை கடைந்து நூதனமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.