வெட்டும் கரும்புக்கு முன்பணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

வெட்டும் கரும்புக்கு முன்பணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-22 19:36 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வருகிற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெட்டும் கரும்புக்கு விவசாயிகளுக்கு முனபணமாக அக்டோபர் மாததத்தில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் கொடுப்பது வழக்கம். கரும்பு விவசாயிகள் இந்த தொகையை வைத்துதான் முன்பணம் கொடுத்து கரும்பு வெட்ட ஆட்களை தக்க வைப்பார்கள். ஆனால் 2022-23-ம் ஆண்டுக்கு இதுவரை சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு முன்பணம் வழங்கவில்லை. இதனால் கரும்பு வெட்டும் ஆட்களுக்கு முன்பணம் கொடுப்பதில் விவசாயிகளுக்கு தாமதம் ஏற்படுகிறது. கரும்பு வெட்டும் ஆட்களும் வேறு ஆலைக்கு ஒப்புதல் ஆகிவிட்டால் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டுவதில் இன்னும் தாமதம் ஏற்படும். எனவே பெரும்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு இந்த மாதத்திலேயே முன்பணம் கொடுக்க வேண்டும் என்று ஆலையின் தலைமை நிர்வாகிக்கு விவசாயிகளும், கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்