கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-28 12:30 GMT

திருப்பூர்,

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின்கீழ் சமர்ச்சீர் பாசனம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும், தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பகவதிபாளையம் பகுதியில் கடந்த 22-ந்தேதி முதல் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெள்ளக்கோயில், காங்கேயம் பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று திடீரென கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்