விளைநிலங்களை தயார்படுத்தும் விவசாயிகள்

ஆனைமலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளைநிலங்களை விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர். மேலும் காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-07-14 21:30 GMT

ஆனைமலை

ஆனைமலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளைநிலங்களை விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர். மேலும் காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளனர்.

சோளம் சாகுபடி

ஆனைமலை ஒன்றிய பகுதியில் 23 ஆயிரம் ஹெக்டரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இது தவிர பந்தல் காய்கறிகள், சோளம், எள்ளு, நிலக்கடலை உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கோடை மழை சரிவர பெய்யாதால் ஆனைமலை ஒன்றிய பகுதியில் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் கோடைகாலத்தில் பயிரிடக்கூடிய நிலக்கடலையை விவசாயிகள் சாகுபடி செய்யவில்லை. சில விவசாயிகள் சாகுபடி செய்தும், நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை.

டிராக்டர் மூலம் உழவு பணி

இதையடுத்து தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது, அடுத்த கட்டமாக சோளம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்வார்கள். ஆனால் தென்மேற்கு பருவமழையும் இன்னும் தீவிரமாக பெய்ய தொடங்கவில்லை.

எனினும் ஆனைமலை அருகே தம்பம்பதியில் டிராக்டர் மூலம் விளைநிலங்களை உழுது சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தென்மேற்கு பருவமழையை எதிர்பாத்து விளைநிலங்களை தயார் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு சோளம் பயிரிட்டபோது, காட்டுப்பன்றிகள் தொல்லையால் நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் அவ்வாறு நடக்காமல் தடுக்க அதிகாரிகள் உதவ வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்