இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்
இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.;
திருவாரூர்;
இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.
பயிலரங்கம்
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளுக்கு "மதிப்புக் கூட்டிய கால்நடை உற்பத்தி பொருட்கள்" பற்றிய 2 நாள் பயிலரங்கம் நடைபெற்றது.இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மு. கிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினாா். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதாரத்தில் வளர்ச்சி
விவசாயிகள் நம் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த பயிலரங்கம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும். பெண்கள், மதிப்புக் கூட்டப்பட்ட கால்நடை உற்பத்தி பொருட்கள் மூலம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையலாம்.இந்த பயலரங்கத்தில் விவசாயிகளுக்கு தேவையான, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, கால்நடை பொருட்களின் மதிப்பு கூட்டல் மற்றும் அவற்றின் தரக்கட்டுப்பாடு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உள்ளூர், வெளியூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் எவ்வாறு விற்பது? வங்கிக் கடன் பெறுதல் போன்றவை குறித்து விரிவாக பயிற்சியளிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி
பயிலரங்கத்தில் தொற்று நோயியல் மற்றும் சுகாதாரத் துறை தலைவர் பேராசிரியர் நடராஜன் கோபாலன், பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுஜித்குமார், ராமராஜசேகரன், ராமகிருஷ்ணன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் கதிர்செல்வன் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.