வட்டார உழவர் ஆலோசனை குழு கூட்டம்

பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார உழவர் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது

Update: 2023-01-30 20:42 GMT

பாபநாசம்;

பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார உழவர் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. வட்டார அட்மா திட்ட ஆலோசனை குழு தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் எபினேஷன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்வதற்கு வழங்கப்படும் மானியங்கள், சோயா பீன்ஸ் சாகுபடிக்கு வழங்கப்படும் மானியங்கள், சிங்க் சல்பேட், ஜிப்சம் மரக்கன்றுகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி தோட்டக்கலை திட்டங்களை பற்றி கூறினார். கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான செயல் திட்டம் விவாதிக்கப்பட்டு குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிவரஞ்சனி, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ரஞ்சனி, பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்