வாய்க்காலில் படர்ந்த ஆகாயத்தாமரைகளை விவசாயிகள் அகற்றினர்

வாய்க்காலில் படர்ந்த ஆகாயத்தாமரைகளை விவசாயிகள் அகற்றினர்

Update: 2022-11-08 19:00 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் நேமம் கிராம பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. நேமத்தில் இருந்து வளவனாறு வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் முழுவதுமாக ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து உள்ளதால் மழைநீர் வடிய முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வடிகால் வாய்க்காலில் படர்ந்த ஆகாயத்தாமரைகளை தாங்களாகவே அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்