விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
திண்டிவனத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் சப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற்றது
திண்டிவனம்
திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் சப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற்றது. இதில் திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தமான பிரச்சினைகளை தெரிவித்தனர்.
இதில் தாசில்தார்கள் வசந்தகிருஷ்ணன், நகருனிஷா, அலெக்சாண்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதாலட்சுமி, சரவணன் மற்றும் வேளாண்மை, பொதுப்பணி, கால்நடை, மருத்துவம், மின்சாரம், தீயணைப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.