விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

வாய்மேடு அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-14 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேடு அருகே மருதூர் வடக்கில் விவசாயிகள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வேதாரண்யம் வட்டத்தில் விவசாய பயன்பாடுகளுக்கு மண் எடுக்கும் தேவையை வலியுறுத்தியும், விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து நடந்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில். விவசாய சங்க வட்டார தலைவர் ஒளிசந்திரன், வாய்மேடு பரமேஸ்வரன் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். அரசு பொது பணிகளில் உள்ளூர் டிராக்டர்களை பயன்படுத்த வேண்டும். விவசாய பொறியியல் துறை பயன்பாடுகளில் உள்ளூர் விவசாயிகள் தங்கள் வாகனங்களை பதிவு செய்து பயன்பெற உறுதி செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை பணிகளை நேரடியாக 50 சதவீதம் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி செய்து பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார அளவிலான போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றபட்டது. முடிவில் முன்னோடி விவசாயி அகிலன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்