வேளாண் கருவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மானிய விலையில் வேளாண் கருவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-22 14:59 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் விளைநிலங்களில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க பவர் டில்லர் என்ற வேளாண் கருவி உதவுகிறது. ஆனால் இவற்றின் விலை அதிகம் என்பதால் விவசாயிகளால் எளிதில் வாங்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியத்துடன் பவர் டில்லர் கருவியை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கருவியை பெற விரும்பும் விவசாயிகளில் சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ரூ.85 ஆயிரமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமாக ரூ.70 ஆயிரமும் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு மேற்கண்ட சலுகை தவிர கூடுதலாக 20 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

வேளாண் கருவியை வாங்க விருப்பம் உள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்