நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

இயற்கை விவசாய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-07-26 20:00 GMT


இயற்கை விவசாய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இயற்கை விவசாயம்

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்து உயிரியல் சுழற்சி இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பது அங்கக விவசாய சாகுபடி ஆகும்.

இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக 2023-2024-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி மற்ற விவசாயிகளை ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நம்மாழ்வார் விருது

நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரி நெட் வலைதளத்தில் வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். மாநில அளவில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது, ரொக்கப்பரிசு, சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை குடியரசு தினத்தன்று முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.

வழிமுறைகள்

முதல் பரிசு ரூ.2.5 லட்சம், ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், 2-வது பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், 3-வது பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும்.

விவசாயிகள் அதற்கான வழிமுறைகள் குறித்து அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்