வாழைத்தாருடன் வந்து விவசாயிகள் போராட்டம்

வாழைத்தாருடன் வந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-23 19:04 GMT


மத்திய, மாநில அரசுகள் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையுடன் 50 சதவீதம் விலை உயர்த்தி தர வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் சூலக்கரையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அமரேசன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று 19-வது நாளாக மாநிலத்தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலாளர் முத்து விசுவநாதன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது விவசாய பெண்கள் கையில் வாழைத்தார் ஏந்தி மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்