கமுதியில் மிளகாய் மண்டலம்-தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

கமுதியில் மிளகாய் மண்டலம்-தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

Update: 2023-04-22 18:45 GMT

கமுதி

கமுதியில் ரூ.5 கோடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் நாகராஜன் அறிவித்தார். இதை கமுதி பகுதி விவசாயிகள் வரவேற்று தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இது குறித்து கமுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமர் கூறியதாவது, கமுதியில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் குண்டு மிளகாய் புவிசார் குறியீடு கிடைத்ததை தொடர்ந்து தமிழக அரசு கமுதியில் ரூ. 5 கோடியில் மிளகாய் மண்டலம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது எங்களைப் போன்ற இயற்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட போக்குவரத்து செலவு, பயண நேரம், அதிக அளவில் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் சேமிப்பு கிடங்குகளால் சாகுபடி செய்யும் மிளகாய் பாதுகாப்பாகவும் மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்ய இயலும் இதற்காக தமிழக அரசுக்கும் வேளாண்மை துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்