சரக்கு வேன் மோதி விவசாயி பலி

சரக்கு வேன் மோதி விவசாயி பலியானார்.

Update: 2023-05-19 19:07 GMT

சின்னதாராபுரம் அருகே உள்ள பருத்திக்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). விவசாயியான, இவர் நேற்று காலை தண்ணீர் எடுப்பதற்காக தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஆரியூர்- ஆண்டி செட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண்டி செட்டிபாளையத்தில் இருந்து ஆரியூர் நோக்கி சென்ற சரக்கு வேன் ஆறுமுகம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்