சின்னசேலம் அருகே கார் மோதி விவசாயி பலி
சின்னசேலம் அருகே கார் மோதி விவசாயி உயிாிழந்தாா்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே இந்திலி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் மேகநாதன் (வயது 38). விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் இந்திலி முருகன் கோவில் அருகே உள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ஒன்று மேகநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மேகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.