பஸ் மோதி விவசாயி பலி

அம்பையில் பஸ் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-30 20:48 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 70). விவசாயி. இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அம்பையில் ஒரு வேலைக்காக சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அம்பை- கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்