நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய விவசாயி

நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய விவசாயி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-26 18:47 GMT

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரன்(வயது 44). விவசாயி. இவரது மனைவி நித்யா(33). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்  அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பூமுடையான்குடிக்காடு கிராமத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். நேற்று தனது உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார். நடைபயணமாக வந்தவர் இருங்களாக்குறிச்சியில் இருந்து ஆணைவாரி ஓடை செல்லும் வழியில் உள்ள புளிய மரத்தில் நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கி உள்ளார். இதனை அவ்வழியே சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து குவாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்