மேல்மலையனூர் அருகேமோட்டார் சைக்கிளிலிலிருந்து தவறி விழுந்து விவசாயி சாவு
மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிளிலிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
மேல்மலையனூர்,
செஞ்சி தாலுகா மேல்ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தஞ்சன் (வயது 62). இவரது மகன் பன்னீர்செல்வம். இவர்கள் இருவரும் மேல்ஒலக்கூர் கிராமத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை பன்னீர்செல்வம் ஓட்டினார். நெகனூர் கிராமத்தின் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிர்பாரத விதாமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.
இதில், பின்னால் உட்கார்ந்திருந்த தஞ்சன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பன்னீர்செல்வம் லேசான காயத்துடன் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.