விபத்தில் விவசாயி சாவு

தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-04 18:01 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). விவசாயி. இவர் சம்பவத்தன்று கொரட்டகிரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் ைசக்கிளில் இருந்து அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுப்பிரமணி உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்