விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-06-30 12:48 GMT

வாணாபுரம்

தச்சம்பட்டு அருகில் உள்ள காட்டம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷாரூன்செரிப் (வயது 60), விவசாயி.

இவர், குடும்ப பிரச்சினையால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, ஷாரூன்செரிப் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஷாரூன்செரிப் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்