மூதாட்டியை தாக்கிய விவசாயி கைது

மூதாட்டியை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-08 18:30 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் பவுண்மணி (வயது 68). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரத்தினம் மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் (44) இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, மூதாட்டி பவுண்மணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி பவுண்மணி அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்