சூளகிரி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி உடல் கரை ஒதுங்கியது

சூளகிரி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி உடல் கரை ஒதுங்கியது

Update: 2022-09-01 17:08 GMT

குளகிரி:

சூளகிரி அருகே உள்ள பட்டா குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 45). விவசாயி. இவர் கடந்த 30-ந் தேதி சூளகிரி அருகே சின்னாற்றில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து மீட்புக்குழுவினர் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் மாதேசின் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சென்ற சூளகிரி போலீசார் மாதேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்