படப்பை அருகே போலி டாக்டர் கைது

படப்பை அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-09-28 19:37 IST

கிளினிக் நடத்தி வந்தார்

சென்னை விருகம்பாங்கம் சஞ்சய் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 64). இவர் படப்பை அடுத்த சோமங்கலம் பஸ் நிறுத்தும் அருகே போதிய கல்வித்தகுதி இல்லாமல் கிளினிக் நடத்தி வருவதாக காஞ்சீபுரத்தில் உள்ள தலைமை சுகாதார துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து இணை இயக்குனர் கோபிநாத் தலைமையில் மருத்துவ குழுவினர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

கைது

அப்போது டாக்டருக்கு படித்ததற்கான போதிய சான்றுகள் எதுவும் இல்லாததை கண்டு மருத்துவ குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் இணை இயக்குனர் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையிலான போலீசார் சம்பத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்