போலி டாக்டர் கைது

குஜிலியம்பாறை போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-19 19:00 GMT

குஜிலியம்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவர், சத்திரப்பட்டி கிளை அஞ்சலக அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். மேலும் அஞ்சல் அலுவலகத்திற்கு பின்புறம் கிளினிக் நடத்தி அப்பகுதி மக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று சத்திரப்பட்டிக்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது செல்வராஜ் கிளினிக் நடத்தி வந்ததும், மருத்துவம் படிக்காமல் அவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஆர்.வெள்ளோடு மருத்துவ அலுவலர் அகிலா சங்கர், குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்