காரைக்குடி,
காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 52). இவர் சித்த மருத்துவம் படித்துவிட்டு அமராவதிபுதூரில் கிளினிக் நடத்தி வந்தார். அங்கு ஆங்கில மருத்துவமுறையில் சிகிச்சை மேற்கொண்டதாக புகார் எழுந்தது. அதன்பேரில் சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர் ஆங்கில மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.