நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம்

சின்னசேலத்தில் நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-09 17:45 GMT

சின்னசேலம்

பொது வினியோக திட்டத்திற்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் 31 சதவீத அகவிலைப்படியை ரேஷன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் சின்னசேலம் தாலுகா அலுவலகம் முன்பு கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளங்கோவன், சுப்பிரமணியன், மோகன், அருள்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் கோவிந்தராஜ் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் நிர்வாகிகள் சக்திவேல், பாண்டியன், மகளிரணி பூங்கொடி, கொளஞ்சி, அர்ஜூனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டத்தால் சின்னசேலம் தாலுகாவில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகள் கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்