இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்; 3 பேர் காயம்

இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-01-19 18:39 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் நர்மதா(வயது 21). அதே பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மகன் சிராக் (25). அப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடம் தொடர்பாக இருவரும் அந்த இடத்திற்கு உரிமை கோரி வந்த வகையில் இரு குடும்பத்திற்கும் இடையில் இடப்பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் நர்மதா தரப்பில் நர்மதா, அவரது தாய் கல்பனா, அவரது சித்தப்பா சசிகுமார் ஆகியோரை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 3 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் நர்மதா தரப்பினர் சிராக் தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக நர்மதா மற்றும் சிராக் ஆகியோர் தா.பழூர் போலீசில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். வழக்கை விசாரித்த சப்- இன்ஸ்பெக்டர் ராஜா, நர்மதா கொடுத்த புகாரின் பேரில் சிராக் தரப்பை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன்கள் கொளஞ்சியப்பன், ராஜேந்திரன், சிராக், விஸ்வா, ராஜேந்திரன் மனைவி கலையரசி, ராஜேந்திரன் மகள்கள் பிரியங்கா, சினேகா ஆகியோர் மீதும், சிராக் கொடுத்த புகாரின் பேரில் கலியபெருமாள் மகன்கள் செந்தில்குமார், சசிகுமார், செந்தில்குமார் மகள் நர்மதா, நர்மதாவின் சகோதரி சாரதா, அவர்களது உறவினரான திருகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி மனைவி புஷ்பா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்