விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டம்

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டம்

Update: 2023-03-02 18:45 GMT

நாகையில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

காலை உணவு வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த திட்டம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக நகர்புற, உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிக்குட்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கலெக்டர் உணவு பரிமாறினார்

அதன்படி நேற்றுமுன்தினம் முதல் நாகை மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டிருந்த காலை உணவை ருசித்து பார்த்தார். பின்னர் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் ஸ்ரீதேவி, பொறியாளர் விஜயகார்த்தி உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்